அமெரிக்காவைச் சேர்ந்த Health Effects State of Global Air 2024 என்ற நிறுவனம் காற்று மாசு பிரச்னைகள் குறித்து ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் காற்று மாசால் இந்தியாவில் சராசரியாக தினமும் 5 வயதுக்குட்பட்ட 464 குழந்தைகள் உயிரிழப்பதாகத் கூறப்பட்டுள்ளது. 2021இல் உலகம் முழுவதும் 81 லட்சம் பேர் இறந்ததாகவும், இதில் இந்தியாவில் மட்டும் 21 லட்சம் பேர் பலியானதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.