கொரோனா பரவல் முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், அண்மையில் பாலிவுட் நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவுகிறதா என கேள்வியெழுந்துள்ளது. இந்நிலையில், கேரளாவை சேர்ந்த கொரோனா தரவு ஆய்வாளர் கிருஷ்ண பிரசாத், கடந்த 6 மாதங்களில் இந்தியாவில் 25,923 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருப்பதாகவும், 240 பேர் பலியாகியிருப்பதாகவும் கூறியுள்ளார்.