இந்தியா உணவில் தன்னிறைவு பெற்ற நாடாகிவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 32வது சர்வதேச மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, பால், பருப்பு வகைகள், மசாலா பொருட்கள் உற்பத்தியில் உலகில் இந்தியா நம்பர் ஒன் நாடாக உள்ளது. உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், காட்டன், சர்க்கரை, டீ உற்பத்தியில் 2வது மிகப்பெரிய நாடாக உள்ளது. 90 சதவீத சிறிய விவசாயிகள் இந்தியாவின் உணவு பாதுகாப்பிற்கு மிகப்பெரிய பலம் என தெரிவித்துள்ளார்.