ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, இன்று 3வது டி20 போட்டியில் விளையாடுகிறது. முதல் போட்டியில் ஜிம்பாப்வேவும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு ஹராரேவில் போட்டி தொடங்கவுள்ளது.