இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தேர்வு செய்யப்படவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக தெரிகிறது. ஆனால் பயிற்சியாளராக இருக்க கௌதம் கம்பீர் பிசிசியிடம் கோரிக்கை ஒன்றை வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. துணை பணியாளர்களை நியமிப்பதில் முழு சுதந்திரம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு பிசிசிஐ ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது. இதனால் அணியிலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.