இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட் (71) நேற்று காலமானார்.ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த மாதம் நாடு திரும்பிய நிலையில், வீட்டில் ஓய்வில் இருந்தார். இந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது. கெய்க்வாட் 40 டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் முன்னாள் பயிற்சியாளராகவும், தேர்வாளராகவும் இருந்தார்.