டி20 உலகக்கோப்பையுடன் தாயகம் திரும்பிய இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மும்பை நகர வீதிகளில் பெருந்திரளான மக்கள் குழுமியிருக்க, பிரம்மாண்ட ரோடு ஷோ நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து வான்கடே மைதானத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் வீரர்களுக்கு ரூ.125 கோடி காசோலை வழங்கப்பட்டது. முன்னதாக பிரதமர் மோடியைச் சந்தித்து அணியினர் வாழ்த்து பெற்றனர்