2024 டி20 உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட அணி உதவியாளர்களுக்கு 125 கோடி பரிசு தொகையை நேற்று பிசிசிஐ அறிவித்திருந்தது. அந்தத் தொகை பிரிக்கப்பட்டு இந்திய அணிக்காக விளையாடிய வீரர்கள் 11 பேருக்கு தலை ஐந்து கோடி பரிசு அளிக்கப்பட உள்ளது. 4 ரிசர்வ் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட அணி உதவியாளர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் பரிசு அளிக்கப்பட உள்ளது. இந்திய அணியின் வெற்றியை ஒட்டுமொத்த ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள்.