இந்திய கிரிக்கெட் அணி வீரர் தீபக் ஹூடாவுக்கு திருமணம் முடிந்துள்ளது. ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துள்ளதாக சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். இந்த புதுமணத் தம்பதிக்கு இந்திய அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஐபிஎல்லில் லக்னோ அணிக்காக விளையாடிவரும் ஹூடா, முன்னதாக ஹைதராபாத் அணிக்காக விளையாடினார்.