டி20 உலகக் கோப்பை இந்திய வீரர்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி என முன்னாள் வீரர் கீர்த்தி ஆசாத் தெரிவித்துள்ளார். விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவின் ஓய்வு கலவையான உணர்வை தருவதாக கூறிய அவர், வருங்கால வீரர்கள் ரோஹித் மற்றும் கோலியின் சாதனைகளை முறியடிப்பார்கள் என்றார். இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய பவுலர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.