இந்தோனேஷியாவில் வடகிழக்கு மலுகுபத்தயா அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 3.32 மணியளவில், கடலுக்கு அடியில் 170 கிமீ ஆழத்தில் 121 கிமீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0ஆக பதிவாகியுள்ளது. இருப்பினும், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. தீவுகள் நிறைந்த இந்தோனேசியா நாடு, ரிங் ஆப் பயர் எனப்படும் பகுதியில் அமைந்துள்ளதால் அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் எரிமலை கொந்தளிப்பு ஏற்படும் பகுதியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.