தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக கூறி தமிழக அரசை கண்டித்து இன்று பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்தும் விதமாக போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இதனை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டித்துள்ளார். அவர் கூறியதாவது, நிர்வாகத் தோல்விகள் தெரியக்கூடாது என்ற பதற்றத்தில் ஆர்ப்பாட்டம் முடக்கப்படுகிறது. பல மாவட்டங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த அடக்குமுறைக்கு பாஜக அஞ்சாது என்றார்.