தமிழகத்தில் ஆளும் கட்சியினரின் ஊழல்களை தோலுரித்துக் காட்டும் அதிமுகவினரை காவல்துறையை ஏவி அரசு அடக்க நினைப்பது தொடர்கதையாகி இருப்பதாக அதிமுகவின் பொதுச் செயலாளர் இ பி எஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது போன்ற சர்வாதிகாரம் தொடர்ந்தால் அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்பதை முதல்வருக்கு எச்சரிக்கையாகவே தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.