தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை பள்ளி சீருடைகள் இலவசமாக வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த கல்வியாண்டில் மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் ஜூலை 29 முதல் சீருடை வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாணவர்களின் சரியான அளவுகளை கணக்கெடுத்து சீருடை மற்றும் காலணிகள் கொள்முதல் செய்யப்படுவதால் தாமதம் ஏற்பட்டதாக விளக்கம் அளித்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் புத்தகப்பை மற்றும் வண்ண பென்சில்கள் ஆகியவற்றை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.