மக்களவைத் தேர்தல் முடிவு வெளிவந்ததும் தமிழக அமைச்சரவை மாற்றப்படலாம் என முதலில் கூறப்பட்டது. ஆனால் பல நாள்களான பின்னரும் அமைச்சரவை மாற்றப்படவில்லை. இந்நிலையில், இந்த மாத கடைசியில் முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும், அதற்கு முன்பு தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது உறுதிப்படுத்தப்படவில்லை.