நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு ஜூலை 1 இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். நீலகிரியின் மேற்கு பகுதிகளான கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்றும் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.