நாட்டில் ஒரு ரயில் நிலையத்தில் பெயர் பலகை இல்லாவிட்டாலும், அங்கு ரயில்கள் நிற்கின்றன. இந்த ரயில் நிலையம் மேற்கு வங்கத்தில் ரெய்னா & ரெய்னாகத் ஆகிய இரண்டு கிராமங்களுக்கு இடையே அமைந்துள்ளது. இதற்கு ரெய்னாகத் நிலையம் என்று பெயரிடப்பட்டுள்ளது. சில சர்ச்சை காரணமாக ரயில் நிலையத்தின் பெயரை ரயில்வே துறை நீக்கியது. தற்போது அந்த ரயில் நிலையம் தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.