புதிய தமிழ்நாடு மதுவிலக்கு திருத்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதன் 5ஏ பிரிவில், மது அருந்த உரிமம் இல்லாத இடத்தை பயன்படுத்தும் குற்றத்திற்காக அந்த இடத்தை வேறு யாரும் பயன்படுத்தாமல் தடுக்கும் நோக்கில் பூட்டி சீல் வைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மதுபானம் தொடர்பான விளம்பர குற்றத்திற்கு 2-5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை, ரூ.1 லட்சம் – ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.