ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் தொடர் வன்முறையில் ஈடுபட்டால் இரண்டு ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே டிஎஸ்பி ரமேஷ் எச்சரித்துள்ளார். செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் இருந்து சென்னைக்கு மின்சார ரயில்களில் வரும் கல்லூரி மாணவர்கள் பலரும் ரூட் தல விவகாரத்தில் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.