சார்பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். அதில் ஆவண பதிவுக்கு சிட்டா அடங்கல், நில அளவீடு வரைபடம், வாடகை மதிப்பு சான்றுகளை எடுத்துவர வேண்டும் என மக்களை கட்டாயப்படுத்தக்கூடாது. அவற்றைக் கொண்டு வரவில்லை என்று கூறி ஆவண பதிவை நிராகரித்தால் கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.