கர்நாடகாவில் திரைப்படம் மற்றும் கலாச்சார பணியாளர்களுக்கான மசோதாவை மாநில அரசு நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தது. அதில் திரைப்பட டிக்கெட்டுகள் மற்றும் OTT சந்தாக்களுக்கு 2 சதவீத வரி விதிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பான முன்மொழிவுகள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சினிமா மற்றும் கலாச்சார கலைஞர்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.