இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குவதை விட ஆன்லைன் டெலிவரி மூலமாக பொருட்களை வாங்க அதிகம் விரும்புகின்றனர். இந்த நிலையில் ஹரியானாவை சேர்ந்த நிறுவனம் ட்ரோன் மூலமாக மளிகை பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களை டெலிவரி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. பல்வேறு விதங்களில் இதனை சோதித்து வருவதாக கூறும் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் காலநிலை மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும் கருதுகின்றனர்.