பிரபல பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத், இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதி எம்பி ஆக உள்ளார். அவர் தனது தொகுதி மக்களுக்கு நூதன நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார். அதாவது தன்னை சந்திக்க வருவோர் ஆதார் அட்டையை கட்டாயம் கொண்டு வரவும் சந்திப்பதற்கான காரணத்தை காகிதத்தில் எழுதி வரும்படி அறிவுறுத்தியுள்ளார். வேறு தொகுதி மக்களை தவிர்ப்பதற்காக அவர் இப்படி செய்துள்ளதாக கூறப்படுகிறது.