தமிழகத்தில் இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் அதி கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை. குமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல நாளை (27.06.2024) நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது