தமிழகத்தில் ஆடி பௌர்ணமி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு இன்றும் நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து தென் மாவட்டங்கள், திருச்சி, ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து இன்று 400 பேருந்துகளும் நாளை 500க்கும் மேற்பட்ட பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது