நாமக்கல்லில் கறிக்கோழி விலை 130 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில் இன்று மூன்று ரூபாய் உயர்ந்து 133 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் சில்லறை விற்பனையில் கிலோ 250 ரூபாய் வரை விற்பனையாகிறது. தேவை அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்து காணப்படுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். கொள்முதல் விலையின்படி முட்டை 5.15 காசாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. சில்லரை விற்பனையில் ஒரு முட்டை 5.70 காசுக்கு விற்பனையாகிறது.