நாமக்கல் மாவட்டத்தில் கறிக்கோழி விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் கறிக்கோழி விலை 13 ரூபாய் குறைந்து 103 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ கோழி இறைச்சி 160 முதல் 260 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆடி மாதம் காரணமாக வரும் நாட்களில் கறிக்கோழி விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.