கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் கடுமையாக உயர்ந்து ஒரு சவரன் 54,000-ஐ கடந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹520 உயர்ந்து ஒரு சவரன் ₹54,080க்கும், கிராமுக்கு ₹65 உயர்ந்து ஒரு கிராம் ₹6,760க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ₹1.50 உயர்ந்து ஒரு கிராம் ₹97.50க்கு விற்கப்படுகிறது.