தமிழ்நாட்டில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனால் மாணவ மாணவர்களின் நலன் கருத்தில் கொண்டு நீலகிரியில் உள்ள உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் குந்தா ஆகிய நான்கு வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது என ஆட்சியர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார்.