தமிழகத்தில் வார இறுதியில் முன்னிட்டு இன்று முதல் ஜூலை 28ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கேளம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு 260 பேருந்துகளும் நாளை 290 பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது. அதனைப் போலவே பெங்களூரு, திருப்பூர் மற்றும் கோவையிலிருந்து பிற பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது