ஜூன் 21 ஆம் தேதி இன்று ஆண்டின் மிக நீண்ட நாளாக இருக்கும். இரவு நேரத்தை விட பகல் நீண்டதாக இருக்கும். இதைத்தான் கோடைகால சங்கிராந்தி என்று கூறுகிறார்கள். பொதுவாக நம் பூமி 23.5 டிகிரி சாய்ந்திருக்கும். சூரியனை சுற்றி வருவதால், ஒரு நாள் பூமியின் வடக்கு அரைக்கோளம் சூரியனுக்கு அருகில் இருக்கும். இது கோடைகால சங்கிராந்தியை ஏற்படுத்துகிறது. வருடத்தில் மீண்டும் ஒருமுறை, டிசம்பர் 21 அல்லது டிசம்பர் 22 அன்று வடக்கு அரைக்கோளம் சூரியனிலிருந்து விலகிச் செல்கிறது. இது “குளிர்கால சங்கிராந்தி” என்று அழைக்கப்படுகிறது.