கோவை, நீலகிரி மாவட்ட மலை பகுதிகளில் இன்று மிக கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளிலும், குமரி மாவட்டத்தில் சில இடங்களிலும் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மழை பெய்யும் போது வெளியில் செல்வோர் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.