பிரபல சமூக ஊடக வலைத்தளமான இன்ஸ்டாகிராமை துருக்கி நாடு தடை செய்துள்ளது. இன்ஸ்டாகிராம் தடைக்கான காரணத்தை துருக்கி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருந்தாலும் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்ட பின்னர் அவர் தொடர்பான உள்ளடக்கத்தை அகற்ற துருக்கி இன்ஸ்டாகிராமை முடக்கியதாக பல தகவல்கள் கூறுகின்றன. சமூக ஊடக தளங்களில் இந்த தடை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்த விளக்கம் அளிக்கப்படவில்லை.