தமிழ் சினிமாவில் ஆடுகளம் திரைப்படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் தான் நடிகை டாப்ஸி. அதனைத் தொடர்ந்து சாஷ்மே படூர் என்ற திரைப்படம் மூலம் பாலிவுட்டில் தடம் பதித்தார். தற்போது ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ள இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், பாலிவுட்டில் நடிக்க தனக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் சாயல் இருந்ததால்தான் வாய்ப்புகள் கிடைத்தன. விவேகமும் அறிவும் கொண்ட அவரைப்போலவே இருக்க முயற்சிக்கிறேன் என்று கூறியுள்ளார்.