வசூல் சாதனையைவிட ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைப்பதுதான் இப்போது இருக்கும் மிகப்பெரிய சவால் என்று நடிகர் நானி வெளிப்படையாக கூறியுள்ளார். தனது சிறு வயதில் காதல், காமெடி உள்ளிட்ட அனைத்து விதமான கதையம்சத்திலும் படங்கள் வந்ததாகக் கூறிய அவர், அதனால்தான் தியேட்டரில் படம் பார்க்க மக்கள் கூட்டங்கூட்டமாக சென்றதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன், ரசிகர்களை சலிப்படைய விடக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.