தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர வீரர் டேவிட் மில்லர் டி20 கிரிக்கெட் இருந்து ஓய்வு பெறுவதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார். நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடருக்கு பின்னர் அவர் ஓய்வை அறிவித்ததாக செய்திகள் வெளியானது. இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர், நான் டி20 ஃபார்மெட் போட்டிகளில் இருந்து விலகவில்லை, தென்னாப்பிரிக்க அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன் என்று பதில் அளித்துள்ளார்.