சிலர் இயர்போன்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதில் பல தீமைகள் இருக்கிறது. இயர்போன்களை அதிகம் பயன்படுத்தினால் காதில் வீக்கம், எரிச்சல், தொற்று போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுகிறார்கள்.
தினமும் 8 மணி நேரத்திற்கும் மேலாக இயர்போன் பயன்படுத்துபவர்களுக்கு காதுகளில் அழுத்தம் அதிகரித்து ஜவ்வு பலவீனம் அடையும். கிருமி நீக்கம் செய்யப்படாத இயர்போன் பட்ஸ் மூலமாக் எளிதில் தொற்று பரவும் என்று கூறப்படுகிறது. ஒருவர் பயன்படுத்திய இயர்போனை மற்றொருவர் பயன்படுத்தும் முன் சானிடைசர் கொண்டு சுத்தம் செய்வது நல்லது.