தேனி தொகுதிக்கு நிறைய திட்டங்களை கொடுத்தும் டெபாசிட் இழந்தது ஏன்? என்று அம்மாவட்ட நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், தங்க தமிழ்செல்வன் மற்றும் தினகரன் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை விட பிரபலமானவர்களா? என்றும் கேள்வி எழுப்பினார். ஒற்றுமையாக இருந்து இனி வரும் தேர்தல்களில், அதிமுகவின் கோட்டையாக தேனியை மாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.