கடந்த ஆண்டு இரு தரப்பினர் இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக கோவை ரேஸ் கோர்ஸ் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரியின் அடிப்படையில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் நேற்று சென்னை புழல் சிறைக்குச் சென்று அவரை கைது செய்ததற்கான ஆவணங்களை காட்டி பலத்த பாதுகாப்புடன் கோவை அழைத்துச் சென்றனர். தொடர்ந்து மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பிறகு கோவை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.