மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும், பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் மும்பையில் வசிக்கிறார். இவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். உணவு ஒவ்வாமைக் காரணமாக அவருக்கு இரைப்பை குடல் அழற்சி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அதே நேரத்தில் இன்னும் சில தினங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறவும் அறிவுறுத்தியுள்ளனர்.