சமீபத்தில் காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பலத்த காயமடைந்த கர்ப்பிணி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சில மணி நேரங்களில் அவர் உயிரிழந்ததை தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து சோதனை செய்தனர். அதில் அவரது வயிற்றில் இருந்த குழந்தைக்கு இதயத்துடிப்பு இருந்ததை அடுத்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தனர். தற்போது குழந்தை நலமுடன் உள்ளது.