பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிர் துப்பாக்கிச் சுடுதல் 10மீ ஏர்பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 6 சுற்றுகளின் முடிவில் 580 புள்ளிகளுடன் மனு பாக்கர் இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் முதல் நபராக அவர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை அவர் பெற்று தருவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.