2024 டி20 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றால் பவுலிங் தேர்வு செய்யக்கூடாது என இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். பார்படாஸ் மைதானத்தின் தன்மை மற்ற மைதானங்களில் இருந்து முற்றிலும் வேறாக இருக்கும் என்ற அவர், முதல் பேட்டிங் செய்யும் அணிக்கு மைதானம் நிச்சயம் உதவிகரமாக இருக்கும் என்றார். ஒருவேளை தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து 180 ரன்கள் எடுத்தால், அதை இந்தியா சேஸ் செய்வது எளிதல்ல எனவும் கூறியுள்ளார். அவர் கூறியதை போலவே டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். போட்டி 8 மணிக்கு தொடங்குகிறது.