திருமண சமத்துவ மசோதா நேற்று தாய்லாந்து நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், ஓர்பால் திருமணத்தை அங்கீகரித்த முதல் தெற்காசிய நாடு என்ற பெருமையை தாய்லாந்து பெற்றுள்ளது. “இறுதியில் காதல் வென்றது” என்று நாடாளுமன்றத்தில் எம்.பி. ஒருவர் பேசியது கவனத்தை ஈர்த்தது. இச்சட்டம் நிறைவேறியதைத் தொடர்ந்து, அந்நாட்டு ஓர்பால் ஈர்ப்பாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.