இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து தனிப்பட்ட காரணங்களால் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விலகுவதாக தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் காயம் காரணமாக பாதியில் வெளியேறிய ஹர்திக் பாண்டியா அதன் பின்னர் தற்போது வரை இந்தியாவுக்காக ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை. இந்நிலையில் இலங்கைக்கு எதிரான இந்த தொடரையும் இழக்க உள்ளார். இது அவருடைய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.