ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர். கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்வது வாடிக்கையாக்கி உள்ளது. நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து சென்ற 22 மீனவர்கள் 3 விசை படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை கண்டித்தும் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் இன்று முதல் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.