இலங்கை கடற்படை ரோந்து படகு மோதி தமிழக மீனவர் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பதற்றத்தை அதிகரித்துள்ளது. மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை அரசின் படக்கு மோதி இராமேஸ்வரம் மீனவர்களின் படகுகள் சேதம் அடைந்து நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. அதில் பயணித்த மீனவர் மலைச்சாமி என்பவர் உயிரிழந்த நிலையில் ராமச்சந்திரன் என்ற மற்றொருவர் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை.