இலங்கை மகளிர் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் களமிறங்கிய இலங்கை 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை மட்டுமே சேர்த்தது. தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ், 19.5 ஓவரில் இலக்கை எட்டியது. அந்த அணியின் காம்பெல் 41 ரன்களை எடுத்தார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது.