நடந்து முடிந்த இளநிலை நீட் தேர்வு முடிவுகளை நகரம் மற்றும் மையங்கள் வாரியாக வெளியிடுவதற்கு தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது நீட் வினாத்தாள் முறைகேடு வழக்கில், மாணவர்களின் அடையாளத்தை மட்டும் மறைத்து தேர்வு முடிவுகளை நாளை மாலைக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என தலைமை நீதிபதி உத்தரவிட்டது. இந்த நிலையில், தேசிய தேர்வு முகமையின் கோரிக்கையை ஏற்று வரும் 20 ஆம் தேதி பிற்பகல் வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.