புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருஞ்சுனையை சேர்ந்தவர் தான் திவ்யா (20). இவர் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தகவலறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திவ்யாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திவ்யா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.